ADDED : டிச 31, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கச்சிராயன்பட்டி ஊராட்சி மனப்பட்டி துவராள்பதி அம்மன் கோயில் காளை நேற்று உடல் நல குறைவால் இறந்தது.
இறந்த காளையை கிராம மக்கள் அலங்காரம் செய்து, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அருகே அடக்கம் செய்தனர்.
இக் காளை 10 ஆண்டுகளாக அலங்காநல்லுார், பாலமேடு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.