ADDED : ஏப் 28, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைந்த நிலையில், அவரது உடலுக்கு மரியாதை அஞ்சலி செலுத்தியபின் வாடிகன் நகரில் நல்லடக்கம் செய்தனர்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி. சர்ச், குழந்தை யேசு ஆலயம் சார்பில் ஊர்லவம் நடந்தது. அவரது உருவப்படத்துடன் உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்தில் இருந்து ஆர்.சி., சர்ச் வரை மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் ஊர்வலம் நடத்தினர். சர்ச்சில் சிறப்பு திருப்பலி, மவுன அஞ்சலி, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

