ADDED : பிப் 12, 2025 04:19 AM
திருப்பரங்குன்றம் : திருமலை நாயக்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு மகாலில் உள்ள சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வளாகத்திலுள்ள சிலைக்கு கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, துணைத் தலைவர் ஜெயராமன், துணைச் செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் தலைமைச் செயலர் ராம்மோகன்ராவ், அ.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் பாரி, ஆர்.எம்.ஆர். பாசறை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பிரபு, வீரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் தலைவர் அயல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமலை நாயக்கர் சமூகநலச்சங்கம் சார்பில் தலைவர் ராதாகிருஷ்ணன் மகாலில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், இளங்கோ, சுந்தரராஜன், ராமச்சந்திரன், சேது, முருகன், ஸ்ரீராமு, முத்துராமன், ரவி, சம்பத் பாலகிருஷ்ணன், மணவாளன், ரவீந்திரன், நவநீதகுமார், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நகர் பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தலைவர் மாரி சக்கரவர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கே.கே. சீனிவாசன், நிர்வாகிகள் பாலமுருகன், மண்டல் தலைவர் திருமுருகன், ஊடகப்பிரிவு ராம்குமார் உடன் இருந்தனர்.
உசிலம்பட்டி
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் அழகுராஜா, உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி ஒன்றிய, நகர நிர்வாகிகள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னதானம் வழங்கினர்.