/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி
/
தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி
ADDED : ஏப் 25, 2025 06:45 AM
திருப்பரங்குன்றம்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானோருக்கு அகில பாரத அனுமன் சேனா சார்பில் திருப்பரங்குன்றத்தில்  தீபாஞ்சலி நடந்தது.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சித்தன்,  செந்தூரப்பாண்டி,  வசந்த், ரவி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் திருமாறன், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், பா.ஜ., இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன்,  நிர்வாகி கபிலன் அஞ்சலி செலுத்தினர்.
தீவிரவாதிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அஞ்சலி செலுத்தியதும், பொதுச்செயலாளர்ராமலிங்கம், பாகிஸ்தான்கொடியை எரிக்க முயன்றார். இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் தடுத்து பாக்., கொடியை பறிமுதல் செய்தார். ராமலிங்கம் மற்றொரு கொடியை கிழித்து எறிந்தார்.

