/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எழுவர் கால்பந்து போட்டி திருச்சி அணி சாம்பியன்
/
எழுவர் கால்பந்து போட்டி திருச்சி அணி சாம்பியன்
ADDED : ஜன 20, 2025 05:34 AM

திருநகர்: திருநகர் ஆக்மி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தென் மாநில எழுவர் கால்பந்து போட்டிகள் திருவள்ளுவர் நகர் கால்பந்து மைதானத்தில் நடந்தது. ஐந்து நாட்கள் நாக் அவுட் முறையில் நடந்த இப் போட்டிகளில் கர்நாடகா, கேரளா, தமிழகத்தை சேர்ந்த 51 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் திருச்சி பாலு நினைவு கால் பந்தாட்ட அணி 'டை பிரேக்கர்' முறையில் 5-4 என்ற கோல் வித்தியாசத்தில் திருச்சி டர்ப் 45 அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்த அணிக்கு ரெப்கோ வங்கி சேர்மன் சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராஜ் ஒரு லட்சம் ரூபாய், கோப்பையை பாண்டியன் மோட்டார்ஸ் நிறுவனர் சவுந்தரபாண்டியன் வழங்கினர்.
இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு செந்தில்குமார் குடும்பத்தினர் ரூ. 50 ஆயிரம், லஜபதி குடும்பத்தினர் கோப்பை வழங்கினர். மூன்றாம் இடம் வென்ற மதுரை டி.வி.எஸ்., அணிக்கு சரத் குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம், ஸ்ரீபதி குமரேசன் கோப்பை வழங்கினர்.
நான்காம் இடம்பிடித்த பெங்களூர் வில்லா பாய்ஸ் அணிக்கு முனீஸ் சார்பில் ரூ. 20 ஆயிரம், சுரேஷ்குமார், ஏக்நாத் கோப்பை வழங்கினர். ஆக்மி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் விஜயன், ராஜு, சீனிவாசன், செந்தில் ஏற்பாடுகளை செய்தனர்.