sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வீரர்களுக்கு 'புல்லட்' வழங்கிய த.வெ.க.,

/

 வீரர்களுக்கு 'புல்லட்' வழங்கிய த.வெ.க.,

 வீரர்களுக்கு 'புல்லட்' வழங்கிய த.வெ.க.,

 வீரர்களுக்கு 'புல்லட்' வழங்கிய த.வெ.க.,


ADDED : ஜன 28, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: மதுரை மேற்கு கீழநெடுங்குளம் கொற்கை ஒருங்கிணைந்த விவசாய பண்ணையில் த.வெ.க., சார்பில் பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

பண்ணை விவசாய குழு நிறுவனர் மற்றும் த.வெ.க.,நிர்வாகி ஜோயல் சாம் ஆசீர் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் ராஜாங்கம், கார்த்திகேயன், அமல்ராஜ் முன்னிலை வகித்தனர். அலங்காநல்லுார், பாலமேட்டில் அதிக காளைகளை பிடித்து சிறந்த வீரராக தேர்வான கருப்பாயூரணி கார்த்திக், பொதும்பு பிரபாகரனுக்கு 'புல்லட்' மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

ஜனநாயக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோலப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கட்சித் துண்டு, கொடி, சின்னம் 'விசில்' வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளில் 'விசில்' வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுத்தனர்.






      Dinamalar
      Follow us