ADDED : ஏப் 03, 2026 06:17 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே பொம்மன்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் 43. த.வெ.க., ஒன்றிய நிர்வாகி. மார்ச் 29 ல் மேலக்கால் புதுப்பாலத்தில் காரை ஓட்டி வந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே மதுரை சென்ற அரசு பஸ் மீது மோதி உருக்குலைந்தது.
இவருடன் வந்த முருகன் 40, சின்னன் 41, ஆகியோரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.
