/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மாநகராட்சி குடிநீர் தனியாருக்கு விற்று மோசடி 'ஜி.பி.எஸ்.,' கருவியால் சிக்கிய லாரி

ADDED : பிப் 24, 2024 04:50 AM
மதுரை : மதுரையில் 3 ஆயிரம் லிட்டர் மாநகராட்சி குடிநீரை தனியாருக்கு விற்ற லாரி உரிமையாளர், டிரைவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாநகராட்சி வார்டுகளுக்கு வைகை அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவரப்பட்டு அரசரடி, கோச்சடை, ஆனையூர், தெப்பக்குளம் பகுதி நீர்தேக்க தொட்டிகள் வழியாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் வசதி இல்லாத வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த லாரிகள், டிராக்டர்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் 87ஆவது வார்டு மக்களுக்கு குடிநீருடன் சென்ற லாரி மாயமானது. அதன் 'ஜிபிஎஸ்' கருவி மூலம் அதிகாரிகள் தேடியபோது நிர்ணயிக்கப்பட்ட இடத்தை கடந்து தனியார் குடியிருப்பு பகுதிக்கு சென்றது தெரியவந்தது. டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
லாரியை மாநகராட்சி மண்டல வாகனப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது 3 ஆயிரம் லிட்டர் குடிநீரை தனி நபருக்கு விற்றது தெரிந்தது. 4ஆம் மண்டல வாகனப்பிரிவு உதவிப்பொறியாளர் ரிச்சர்ட் பால் புகாரில் லாரி உரிமையாளர் கேசவராம், டிரைவர் மணிகண்டன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒப்பந்த உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.