ADDED : அக் 02, 2024 07:13 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி : கட்டடப் பணிகளுக்கு அத்தியாவசிய தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை குவாரிகளில் யூனிட் ஒன்றுக்கு ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதை கண்டித்து கட்டட பொறியாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் லாரி உரிமையாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கிரஷர், குவாரி உரிமையாளர்கள் விலையை அதிகரித்துள்ளனர். இதனால் கட்டுமான பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என உசிலம்பட்டி கோட்ட அனைத்து லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று(அக்.1) முதல் அக். 6 வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி வளாகத்தில் லாரிகளை நிறுத்தியுள்ளனர். சங்கத் தலைவர் செல்வம், செயலாளர் மதுசூதனன், பொருளாளர் தென்றல் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
