UPDATED : அக் 09, 2026 09:59 PM
ADDED : அக் 09, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்:
வெற்றிப் பயண திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு புதிய பஸ்கள் வழங்கப்பட்டன.
நேற்று செக்கானுாரணியில் இருந்து மதுரை செல்ல 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் புறப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறி 50 அடி துாரம் செல்வதற்குள் பழுதடைந்து ரோட்டில் நின்றது. பயணிகள் பஸ்சை தள்ளி விட்டனர். அதன்பின்னும் பஸ் கிளம்பவில்லை. இதையடுத்து அனைவரும் மாற்று பஸ்சில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
