/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் அன்புக்காகவே டங்ஸ்டன் திட்டம் ரத்து; சட்டபை தீர்மானத்தால் அல்ல: பாராட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு
/
மக்கள் அன்புக்காகவே டங்ஸ்டன் திட்டம் ரத்து; சட்டபை தீர்மானத்தால் அல்ல: பாராட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு
மக்கள் அன்புக்காகவே டங்ஸ்டன் திட்டம் ரத்து; சட்டபை தீர்மானத்தால் அல்ல: பாராட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு
மக்கள் அன்புக்காகவே டங்ஸ்டன் திட்டம் ரத்து; சட்டபை தீர்மானத்தால் அல்ல: பாராட்டு விழாவில் அண்ணாமலை பேச்சு
ADDED : ஜன 30, 2025 10:48 PM

மதுரை : 'தமிழகத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதால் அல்ல; தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள அன்புக்காகவே டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது' என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவத்தார்.
மதுரை மேலுார் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக மத்திய அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அண்ணாமலை பேசியதாவது:
மதுரை மேலுார் பகுதியில் முல்லை பெரியாறு விவசாய பாசனம் உள்ளது. 250க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள இடத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஒரு விஷயத்தை மக்கள் இங்கே புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் மோடி அரசு தமிழக மக்களுக்கு எதிராக ஒருபோதும் எந்த திட்டங்களையும் கொண்டு வராது. முன்பு இருந்த அரசு, இதுபோன்ற திட்டத்திற்கு கையயெழுத்திட்டுள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் ஒப்பந்தம் விடப்பட்டது. தஞ்சை மீத்தேன் போன்ற திட்டங்கள் இதுபோல் தான் நடந்தன.பின் மக்கள் போராட்டம் எதிரொலியாக நிறுத்தப்பட்டன.
இன்று இப்பகுதி எப்படிப்பட்டது என மத்திய அரசுக்கு தெரியாது. இப்பகுதியில் சமணர் படுகை உள்ளது, பல்லுயிர் பகுதி உள்ளது தெரியாது. இப்பகுதியில் டங்ஸ்டன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 15.9.2023ல் மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு தமிழக அரசு எழுதிய பதிலில், 476 ஏக்கரில் பல்லுயிர் பூங்கா மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளது. கோயில்கள், விவசாய ↔தொடர்ச்சி ௪ம் பக்கம்நிலங்கள், தொல்லியல் பாதுகாப்பு பகுதிகள் குறித்து அந்த பதிலில் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் 2024 ஏப்ரலில் முதல் டெண்டர் அறிவித்தபோது அதை யாரும் எடுக்கவில்லை. அதன் பின் ஜூலையில் விடுக்கப்பட்ட டெண்டரையும் எடுக்கவில்லை. நவம்பரில் ஒரு நிறுவனம் எடுத்தபின் தான் நமக்கெல்லாம் இவ்விஷயம் தெரியவந்தது.
அதன் பின் இப்பகுதி விவசாயிகள், மக்கள் அறவழி போராட்டம் நடத்தினார்கள். அதையடுத்து இப்பகுதி மக்கள் 12 பேர் டில்லிக்கு அழைக்கப்பட்டனர். அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசியபோது அவர் மறுநாளே திட்டத்தை ரத்து செய்யப் போவதாக அறிவித்தார். அதன் பின்னரும் 'ரத்து உத்தரவை பெற்ற பின் தான் ஊரு திரும்புவோம்' என்றனர். அதனால் அவர்களை அமைச்சர் வீட்டில் தங்க வைத்து, மறுநாள் மாலை 4:31 மணிக்கு திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்தார்.
மத்திய அரசு இதுபோல் ஒரு திட்டத்தை ரத்து செய்வது என்பது சாதாரணமானது அல்ல. உங்கள் குரலுக்கு செவி சாய்த்து பிரதமர் மோடி எடுத்த முடிவு இது. நீங்கள் நடத்திய அறவழிபோராட்டத்தில் 18 கிலோ மீட்டர் மதுரைக்கு கட்டுக்கோப்பாக நடந்து சென்றீர்கள். அப்படி இருக்கும் போது பிரதமர் எப்படி ரத்து செய்யாமல் இருப்பார். தமிழக மக்களின் ஊனோடும் உணர்வோடும் கலந்து பிரதமர் மோடி இருக்கிறார். அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போதும் அதை திரும்பி கொடுத்தார்.
மிரட்டலுக்கு பயந்து ரத்து இல்லை
உங்கள் அன்பை பார்த்து நெகிழ்ந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இங்கு வந்துள்ளார்.
இங்கு அரசியல் பேசக்கூடாது. ஆனால் ஒரு விஷயத்தை தெரிவிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இங்கு வந்து பேசிச் சென்றுள்ளார். அவருக்கு நாங்கள் பதில் கூற வேண்டும். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அப்படி பார்த்தால் வாரந்தோறும் சட்டசபையில் தீர்மானங்கள் போடுவது தான் உங்கள் வேலையாக உள்ளது. மாநில அரசின் மிரட்டலுக்கு பயந்து மத்திய அரசு ரத்து செய்யவில்லை. பிரதமர் மோடி உக்ரைன், ரஷ்யாவையே கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார். இதுபோன்ற மாநில அரசுக்குகெல்லாம் பயந்து ரத்து செய்யவில்லை.
இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் மேலுார் பகுதியில் மேலும் விவசாயம் செழிக்கும். அதற்கு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்கும் தகுதி தமிழக அரசிடம் தான் உள்ளது. இவ்வாறு பேசினார்.