ADDED : மார் 20, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
பாலமேடு: வலையபட்டி மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயிலில் த.வெ.க.,சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என வேண்டி இந்த நிகழ்வு நடந்தது. நகர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை, புறநகர் மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்தனர்.
மாவட்ட இணை செயலாளர் நடராஜ், மாவட்ட நிர்வாகி விக்னேஷ், ஒன்றிய செயலாளர் ஹரிஷ் முன்னிலை வகித்தனர்.
நகர் செயலாளர் ரஞ்சித் வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் தனசேகர், கார்த்திக், பாலமேடு நகர் செயலாளர் புகழ் உட்பட பலர் பங்கேற்றனர். தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.
