/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரண்டு பஸ்... 10 கி.மீ., பயணம்... அலைக்கழிக்கப்படும் கர்ப்பிணிகள் கொட்டகுடியில் கொடுமை

ADDED : ஆக 22, 2025 03:00 AM

மேலுார்: கொட்டகுடியில் சுகாதார நிலையம் ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற அலையவேண்டியுள்ளது.
இங்கு 20 ஆண்டுகளாக துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம் செவிலியர் குடியிருப்புடன் செயல்பட்டது. பனங்காடி, அரசப்பன்பட்டி உட்பட 3 ஊராட்சிகளை சேர்ந்த கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் பரிசோதனைக்கு வந்து சென்றனர். குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்பட்டது. நாளடைவில் கட்டடம் சிதிலமடையவே சுகாதார நிலையம் ஊராட்சி அலுவலகத்தில் செயல்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்ததோடு சரி. இதுவரை செயல்படவில்லை.
கர்ப்பிணிகள் கூறியதாவது: கொட்டகுடியில் சுகாதார நிலையம் இல்லாததால் 2 பஸ்கள் மாறி 10 கி.மீ., துாரம் உள்ள திருவாதவூருக்கு மருத்துவ பரிசோதனைக்காக அலைய வேண்டியுள்ளது. அங்கு எல்லா கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் வருவதால் நாள் முழுவதும் காத்து கிடக்கிறோம். நேரம், பணம் விரையமாகிறது.
எங்கள் பகுதிக்கு இல்லம் தேடி மருத்துவத்தின் கீழ் வீடுகளுக்கு மாத்திரை வழங்குபவர்களும் வருவதில்லை. புதிதாக சுகாதார நிலையம் கட்டும் வரை கொட்டக்குடி பஸ் ஸ்டாப்பில் செயல்படும் நுாலகம், இ சேவை மையம் அல்லது ஊராட்சி அலுவலகம் இம்மூன்றில் ஏதாவது ஒரு இடத்தில் சுகாதார நிலையம் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.