தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மஞ்சுவிரட்டில் இருவர் பலி

 மஞ்சுவிரட்டில் இருவர் பலி

 மஞ்சுவிரட்டில் இருவர் பலி


ADDED : மார் 12, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே உறங்கான்பட்டியில் மந்தை கருப்பண சுவாமி கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு 5 கிராமங்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

சிவகங்கை மாவட்டம் கன்னிமார்பட்டி கோவிந்தராஜ் 55, மஞ்சுவிரட்டுக்கு மாடுகளை அவிழ்த்து வேடிக்கை பார்த்தபோது, மற்றொரு மாடு குத்தி இறந்தார். ராம்நாடு வைரமுத்து 20, வேடிக்கை பார்த்தபோது மாடு முட்ட வரவே ஓடியவர் தடுமாறி தாமரை குளத்தில் விழுந்துஇறந்தார்.

69 பேருக்கு காயம் ஏற்படவே வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தாசில்தார் முத்துப்பாண்டி, அறநிலையத்துறை செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி பங்கேற்றனர். டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us