ADDED : ஏப் 23, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ராமர் மகன் ஊத்தடியான். இவர் நேற்று காலை டூவீலரில் மதுரை நோக்கி வந்தார். வலையங்குளம் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது விருதுநகர் சென்ற அரசு பஸ் மோதியதில் ஊத்தடியான் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
திருச்சுழி உடையனம்பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் 40, நேற்று மாலை மதுரை நோக்கி டூவீலரில் வந்தார். வலையங்குளம் அருகே விருதுநகர் சென்ற தனியார் பஸ், டூவீலரில் மோதியதில் முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
