ADDED : ஆக 01, 2025 02:23 AM
மதுரை: மதுரை அருகே இடத்தகராறில் பெண்ணை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அலங்காநல்லுார் வடுகபட்டி ராஜம்மாள். 2019ல் அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி, இடப்பிரச்னை தொடர்பாக தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக வந்த சிலர் இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ராஜம்மாள், அவரது மகன் ராம்குமாரை தாக்கினர். ராஜம்மாள் உயிரிழந்தார். இதுதொடர்பாக வீமன், அவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் கமல்பாண்டி, செல்வபாண்டி, ராஜபாண்டி ஆகியோரை அலங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது வீமன் இறந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜவஹர் ஆஜராகி வாதிட்டார். அதில், கமல்பாண்டி, செல்வபாண்டி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், ராஜபாண்டி, மகேஸ்வரியை விடுதலை செய்தும் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உத்தரவிட்டார்.