sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறைத்துறையில் முதன்முதலாக சீர்திருத்தம்; நவீனமயமாக்கலுக்கு இரு எஸ்.பி.,க்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட சீர்த்திருத்தம்

/

சிறைத்துறையில் முதன்முதலாக சீர்திருத்தம்; நவீனமயமாக்கலுக்கு இரு எஸ்.பி.,க்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட சீர்த்திருத்தம்

சிறைத்துறையில் முதன்முதலாக சீர்திருத்தம்; நவீனமயமாக்கலுக்கு இரு எஸ்.பி.,க்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட சீர்த்திருத்தம்

சிறைத்துறையில் முதன்முதலாக சீர்திருத்தம்; நவீனமயமாக்கலுக்கு இரு எஸ்.பி.,க்கள் 41 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட சீர்த்திருத்தம்


ADDED : டிச 11, 2024 06:42 AM

Google News

ADDED : டிச 11, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழக சிறைத்துறையில் முதன்முதலாக சீர்திருத்தம், பயிற்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கென புதிதாக இரு எஸ்.பி., பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், மாவட்ட சிறைகள், திறந்தவெளிச் சிறைகள், கிளைச்சிறைகள் என 138 சிறைகள் உள்ளன. சிறை நிர்வாகம் 1983 ல் உருவாக்கப்பட்ட சட்டவிதிகளின்படி இதுவரை செயல்பட்டு வந்தது. தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சட்ட சீர்திருத்தம் செய்யப்பட்டு, 'தமிழ்நாடு சிறை விதிகள் 2024' என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் புதிதாக ஐ.ஜி., மற்றும் இரு எஸ்.பி., பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது சிறை ஐ.ஜி.,யாக கனகராஜ் உள்ளார். ஆனால் இதுவரை அவருக்கான பணிகள் என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்தப்படாமல் இருந்ததால் அவர் வழக்கமான ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது புதிய விதிகள்படி அவர் நீதிமன்றங்களில் சிறை நிர்வாகம் சார்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தல், கைதிகள், சிறை ஊழியர்கள் தொடர்பான வழக்குகள் குறித்து டி.ஜி.பி.,யிடம் ஆலோசிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆய்வு செய்பவர்களை சிறைக்குள் அனுமதிக்கலாம்.

சிறை நிர்வாகப்பணிகள் அனைத்தும் கண்காணிக்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறை சீர்திருத்தம், பயிற்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு புதிதாக இரு எஸ்.பி., பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் குறித்து அடுத்தாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் முறைப்படி அறிவிக்கப்படும். சிறை சீர்திருத்தத்திற்கான எஸ்.பி., சிறையில் தேவையான மாற்றங்களை செய்து கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் புதிய தொழில்களை உருவாக்குதல், இளம் கைதிகளுக்கு தேவையான தொழில் பயிற்சிகள் அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.

பயிற்சி, நவீனமயமாக்கல் எஸ்.பி., கைதிகளுக்கு புத்துணர்வு பயிற்சி உள்ளிட்ட பணிகளை கவனிப்பார். தவிர சிறையில் தொழில்நுட்ப வசதிகள், வாகன வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்துவார்.

இதுதவிர மத்திய உள்துறையின்கீழ் உள்ள போலீஸ் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட கைதிகள் உரிமை, கடமைகளை சிறைத்துறை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us