ADDED : மார் 23, 2026 06:52 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அவற்றை ஓட்டி வந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் குருபாண்டி 20. கட்டடத் தொழிலாளி. திருநெல்வேலி பாளை.,யைச்சேர்ந்தவர் சண்முகவேல் 27. மதுரை ஓட்டல் ஒன்றில் தங்கி பணியாற்றினார். நேற்று காலை தெப்பக்குளம் அருகே நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் வேகமாக 'பைக்'குகளை (ஹெல்மெட் அணியவில்லை) ஓட்டி வந்த இருவரும் நேருக்கு நேர் மோதியதால் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
