sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் 56.5 சதவீதம்; அபாயமிக்கதாக அறியப்பட்டவை 76 இடங்கள்

/

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் 56.5 சதவீதம்; அபாயமிக்கதாக அறியப்பட்டவை 76 இடங்கள்

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் 56.5 சதவீதம்; அபாயமிக்கதாக அறியப்பட்டவை 76 இடங்கள்

விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் 56.5 சதவீதம்; அபாயமிக்கதாக அறியப்பட்டவை 76 இடங்கள்


UPDATED : ஜன 13, 2026 07:38 AM

ADDED : ஜன 13, 2026 06:06 AM

Google News

UPDATED : ஜன 13, 2026 07:38 AM ADDED : ஜன 13, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகரில் சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக நகரில் 76 இடங்கள் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்விடங்களில் 'ஜிக் ஜாக்' முறையில் தடுப்பு அமைத்தல், சாலைகளில் வர்ணம் பூசுதல், ஒரு வழிப்பாதை அமைத்தல், ஒளிரும் விளக்குகள் பொருத்துதல், வேகக் கட்டுப்பாட்டு பலகைகள் மற்றும் சாலைக் குறி யீடுகள் நிறுவுதல், சாலை வடிவமைப்புகளை மாற்றி யமைத்தல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

இதன் காரணமாக 2022, 2023, 2024ல் இந்த 76 இடங்களில் 24 இடங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. சாலை விபத்தை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 2025-ம் ஆண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 714 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப் பட்டு ரூ.44 கோடியே 91 லட்சத்து 55 ஆயிரத்து 325 -அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான ஆய்வில், நகரில் நடக்கும் மொத்த விபத்துகளில் பாதசாரிகள் 40 சதவீதம், டூவீலர் ஓட்டிகள் 56.5 சதவீதம் என அதிக அளவில் பாதிக்கப்படு கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் தேவையற்ற இடைவெளிகளாக கருதப்பட்ட 249 இடங்கள் அடைக்கப் பட்டன. டூவீலர் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நகரில் நடந்தது.

கடந்தாண்டை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விபத்து 19, காயவிபத்து 14 குறைந்துள்ளன. இதன் மூலம் மொத்த விபத்துகள் 5.1 சதவீதமாக குறைந்து உள்ளது என்றனர் போலீசார்.Image 1521292






      Dinamalar
      Follow us