/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆமைகள் கடத்தி வந்த இரு பெண்கள் கைது
/
ஆமைகள் கடத்தி வந்த இரு பெண்கள் கைது
ADDED : ஜன 30, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்; விமானத்தில் பாங்காக் நாட்டிலிருந்து 13 ஆமைகளை கடத்தி வந்த இரு பெண்கள் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை சாவித்திரி 36, திருப்பூர் உஷா 30. இருவரும் பாங்காக் நாட்டிலிருந்து இலங்கை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர். அவர்களது உடமைகளை சுங்க இலாகா வான்வழி நுண்ணறிவு துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது 13 ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

