/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில சுயாட்சிபடியே அ.தி.மு.க., ஆட்சி செய்தது உதயகுமார் சொல்கிறார்
/
மாநில சுயாட்சிபடியே அ.தி.மு.க., ஆட்சி செய்தது உதயகுமார் சொல்கிறார்
மாநில சுயாட்சிபடியே அ.தி.மு.க., ஆட்சி செய்தது உதயகுமார் சொல்கிறார்
மாநில சுயாட்சிபடியே அ.தி.மு.க., ஆட்சி செய்தது உதயகுமார் சொல்கிறார்
ADDED : ஏப் 20, 2025 04:30 AM
மதுரை : ''மாநில சுயாட்சியின் படியே அ.தி.மு.க., ஆட்சி செய்தது. அதன் வடிவிலேயே அ.தி.மு.க., செயல்படுகிறது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம்தொடர்பாக மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசினார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் கூட்டணியை பழனிசாமி அமைத்து உள்ளார். கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தி.மு.க.,வினர் அ.தி.மு.க., கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா என பேசி வருகின்றனர். இதன் மூலம் 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., வெற்றி கூட்டணி அமைத்ததால்முதல்வர் ஸ்டாலின் வெலவெலத்து போய் இருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன் அ.தி.மு.க., கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. மாநில சுயாட்சி தீர்மானம், நீட் தேர்வு ரத்து தீர்மானம், மும்மொழி கொள்கை தீர்மானம், கச்சத்தீவு தீர்மானம் என சட்டசபையில் தீர்மான நாடகத்தை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி அழகிரி, தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கினார்.
மாநில சுயாட்சியின் படியே அ.தி.மு.க., ஆட்சி செய்தது. அதன் வடிவிலேயே அ.தி.மு.க.,செயல்படுகிறது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு பூஜ்யமும், அ.தி.மு.க.,வுக்கு ராஜ்யமும் கிடைக்கும் என்றார்.

