sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செங்கோட்டையனின் பிம்பம் உடைந்து விட்டது சொல்கிறார் உதயகுமார்

/

செங்கோட்டையனின் பிம்பம் உடைந்து விட்டது சொல்கிறார் உதயகுமார்

செங்கோட்டையனின் பிம்பம் உடைந்து விட்டது சொல்கிறார் உதயகுமார்

செங்கோட்டையனின் பிம்பம் உடைந்து விட்டது சொல்கிறார் உதயகுமார்


ADDED : நவ 03, 2025 04:42 AM

Google News

ADDED : நவ 03, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை. அமைதியானவர், நடுநிலைமை தவறாததவர் என்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பிம்பம் உடைந்து விட்டது, '' என மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் சாடினார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: நம்பினார் கெடுவதில்லை என வாழ்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியும் தன்னை நம்பி கெட்டவர் யாரும் இல்லை என வரலாறு படைத்துள்ளார்.

இன்று நம்பாமல் கெட்டவர்கள் வரிசையில் செங்கோட்டையன் உள்ளார். அமைதி, அடக்கம், அதிர்ந்து பேசாதவர், நடுநிலை தவறாதவர், கட்சித்தொண்டர் என்ற பொய்யான பிம்பத்தின் கட்டமைப்பு இன்று உடைந்து விட்டது. அவரது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் தான் ஒரு சுயநலவாதி, எத்தகைய துரோக எண்ணத்தில் இருந்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பழனிசாமியை குறைத்து மதிப்பிட்டவர்கள் தோற்றுப்போன வரலாறு உள்ளது.

இந்த இயக்கத்தின் சாமானிய தொண்டன் என்ற முறையில் செங்கோட்டையனிடம் சில கேள்விகள் :

ஜெயலலிதா இருக்கும்வரை அவரது நம்பிக்கையை ஏன் பெற முடியவில்லை. அவரது மறைவுக்குப்பின் நீங்கள் அமைச்சராக பொறுப்பேற்றீர்கள். அதன்பின், தங்கள் பதவி, ஜெ.,வின் அரசு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த பதிலடி கொடுத்தீர்களா.

பாராட்டுப் பத்திரம் நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., அரசை குறை கூறியது உண்டா. ஸ்டாலின் அரசு கண் ணியமிக்க அரசாக நடந்து கொண்டது என பாராட்டு பத்திரம் செய்தது சட்டசபை பதிவில் உள்ளது. பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 170 தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தை நடத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு தான் அவரது ஈரோடு வருகையில் நீங்கள் பங்கேற்க மாட்டேன் என்று கூறியது. ஏற்றுக்கொண்ட தலைமை மீது எவ்வளவு பழிசுமத்த முடியுமோ அவ்வளவு பழியை சுமத்துகிறீர்கள்.

உங்கள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் நடத்தப்போகும் சட்டப்போராட்டம் சுயநலமாகத்தான் அமையுமே தவிர பொது வாழ்க்கைக்கு பொது நலம் தராது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us