/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் ஒட்டிய உதயகுமார்
/
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் ஒட்டிய உதயகுமார்
ADDED : ஜன 21, 2025 06:00 AM
கள்ளிக்குடி: மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கள்ளிக்குடியில் 'யார் அந்த சார்' ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டும் நிகழ்ச்சி சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது : தி.மு.க., அரசு 4 ஆண்டுகளில் அதிகளவில் கடன் வாங்கி இருக்கிறது. 4 ஆண்டுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. மூலதன செலவு மட்டும் குறைந்து இருக்கிறது என்று கேட்டால் 'வாழைப்பழ காமெடி' போல் அரசு பதில் அளிக்கிறது. கிராமங்களில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இதில் இருந்து தமிழக இளைஞர்களை, எதிர்கால சந்ததியரை காப்பாற்றுங்கள் என வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
தமிழ்நாட்டில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அரங்கேறினாலும் தடுத்து நிறுத்த முதல்வர் அக்கறை செலுத்தவில்லை. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. மாணவி மீதான வன்கொடுமைக்கும் இந்த அரசு நீதி வழங்க அக்கறை செலுத்தவில்லை. நாட்டில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக இருந்தால் வளர்ச்சி கேள்வி குறியாகிவிடும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, பிரபுசங்கர் ,கண்ணன்,அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

