/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளைஞரணியில் உச்சம் தொட்டவர் உதயநிதி; உதயகுமார் தாக்கு
/
இளைஞரணியில் உச்சம் தொட்டவர் உதயநிதி; உதயகுமார் தாக்கு
இளைஞரணியில் உச்சம் தொட்டவர் உதயநிதி; உதயகுமார் தாக்கு
இளைஞரணியில் உச்சம் தொட்டவர் உதயநிதி; உதயகுமார் தாக்கு
ADDED : பிப் 09, 2026 04:56 AM
மதுரை: தி.மு.க., ஆட்சியிலும், கட்சியிலும் உச்ச பதவிக்கு வந்தவர் துணை முதல்வர் உதயநிதி மட்டுமே; வேறு இளைஞர்கள் யாராவது முன்னேறியுள்ளனரா, என மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலினின் குடும்ப சொத்தாக தி.மு.க., மாறி வருகிறது. அக்கட்சியில் இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன் என உதயநிதி கூறுகிறார். ஐந்தாண்டு ஆட்சியிலும், கட்சியிலும் அவர் மட்டுமே துணைமுதல்வர் பதவிக்கு வந்துள்ளார். அவர் தவிர இளைஞர்கள் வேறு யாரும் முன்னேறியுள்ளனரா.
விருதுநகரில் இளைஞர்களை அழைத்து வந்து 'நீங்கள் உழையுங்கள். நாங்கள் உயர்கிறோம்' என மறைமுகமாக கூறி குடும்ப ஆட்சியை உறுதி செய்துவிட்டு சென்றுள்ளீர்கள். உங்கள் வாய்ஜாலத்தை இனிமேல் இளைஞர்கள் நம்பமாட்டார்கள். 'சவுடால் பேர்வழி' என பழனிசாமியை வாய்க்கு வந்தபடி பேசுவதன் மூலம் நீங்கள் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். பழனிசாமியின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.,வுக்கு 2026 தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க தயாராகி விட்டனர் என்றார்.

