/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உதயநிதி பிறந்த நாள் 50 இடங்களில் அன்னதானம்
/
உதயநிதி பிறந்த நாள் 50 இடங்களில் அன்னதானம்
ADDED : நவ 22, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் துணைமுதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு நவ.27ல் வடக்கு மாவட்டம் தி.மு.க., சார்பில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: உதயநிதி பிறந்த நாளையொட்டி மீனாட்சி கோயில், ரயில்வே ஸ்டேஷன், முதியோர் காப்பகம், பார்வையற்றோர் இல்லம், கோயில்கள், தொண்டு நிறுவனங்கள் என மதுரை கிழக்கு, மேலுார், சோழவந்தான் சட்டசபை தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ. 28 முதல் ஒருமாதம் வரை அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்றார்.