ADDED : ஏப் 07, 2025 06:13 AM

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் தெலுங்கு வருட பிறப்பு குடும்ப விழா நேற்று கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். துணைச் செயலாளர் ராஜேந்திர பாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, விழா தலைவர் சஞ்சய், நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் மாநில பொருளாளர் பாஸ்கரன், வரலாற்றுத் துறை ஆசிரியர் ரத்னகுமார், பாரதி இன்பினிட்டி மருத்துவமனை ஆழ்வார் ராமானுஜம் பேசினர்.
கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இணைத் தலைவர் சுப்புராஜ் நன்றி கூறினார். நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் கூடலழகர் பெருமாள் கோயில் உற்ஸவர்கள் வரவழைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

