/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடக்க முடியாத ரோடு 'ராஜவீதி' யாம் கீழவளவில் கிச்சு... கிச்சு...
/
நடக்க முடியாத ரோடு 'ராஜவீதி' யாம் கீழவளவில் கிச்சு... கிச்சு...
நடக்க முடியாத ரோடு 'ராஜவீதி' யாம் கீழவளவில் கிச்சு... கிச்சு...
நடக்க முடியாத ரோடு 'ராஜவீதி' யாம் கீழவளவில் கிச்சு... கிச்சு...
ADDED : பிப் 10, 2025 04:57 AM

மேலுார்: கீழவளவு ராஜவீதியில் ஜல்லிக் கற்கள் பரப்பிய ஒப்பந்ததாரர் ரோடு அமைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.
கீழ்வளவு ராஜவீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ரோட்டில் குடியிருப்புகள் அதிகமுள்ளன. வீரகாளியம்மன் கோயில் தேர் சுற்றி வரும் முக்கிய வீதியாகவும், விவசாய நிலங்கள், வங்கி, ஐந்து மயானங்கள், அட்டப்பட்டி - கீழவளவு இணைப்பு சாலையாகவும் உள்ளது. தவிர அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. ரோட்டை சீரமைத்து 19 ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்தது. புதிய ரோடு அமைக்க ஒப்பந்ததாரர் ஜல்லிக்கற்களை பரப்பியதோடு சரி நீண்டநாட்களாக ரோடு அமைக்கவில்லை.
அப்பகுதி அன்பழகன் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜல்லிகற்கள் பரவிக் கிடந்து நடந்து செல்வோரின் காலில் காயமடைகின்றனர். டூவீலரில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். ரோட்டின் நிலை கண்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்கூட வர மறுக்கின்றன. ரோடு சரி இல்லாததால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கிறோம். கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் ரோடு அமைக்கவில்லை. ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து ரோடு அமைக்க வேண்டும் என்றார்.
பி.டி.ஓ., சுந்தர சாமி கூறுகையில், ''உடனே ரோடு அமைக்கும் பணிகள் துவங்கப்படும்'' என்றார்.

