அறிவிக்கப்படாத முதல்வர்! நிர்மல் குமார் குறித்து உதயகுமார் விமர்சனம்
அறிவிக்கப்படாத முதல்வர்! நிர்மல் குமார் குறித்து உதயகுமார் விமர்சனம்
ADDED : அக் 28, 2026 05:12 PM
மதுரை: ‘‘மின்சாரம், சட்டம், சிறை, லஞ்ச ஒழிப்பு உட்பட 7 முக்கிய துறைகளை கவனித்து வரும் அமைச்சர் நிர்மல்குமார், அறிவிக்கப்படாத முதல்வராக மற்ற துறைகள் குறித்தெல்லாம் விளக்கம் சொல்கிறார்’’ என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
த.வெ.க., ஆட்சியில் இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, தற்போது அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு ஏற்பட்டிருக்கிறது. மின்தடையும் சர்ச்சையாக இருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
மின்சாரம், சட்டம், சிறை, லஞ்ச ஒழிப்பு உட்பட 7 முக்கிய துறைகளைக் கவனித்து வரும் அமைச்சர் நிர்மல்குமார், அறிவிக்கப்படாத முதல்வராக மற்ற துறைகள் குறித்தெல்லாம் விளக்கம் சொல்கிறார். ‘அ.தி.மு.க.,வுக்கும், பழனிசாமிக்கும் எதிர்காலம் இல்லை. தொண்டர்களுக்கு எதிர்காலம் இல்லை’ என்று பேசும் நிர்மல்குமாரின் ஒரே அஜெண்டா, தமிழகத்தில் த.வெ.க.,வுக்கு எதிர்காலம் இருக்கக்கூடாது என்பதுதான். அவர் ஒரு காலத்தில் அ.தி.மு.க.,வில் இருந்தவர் என்பதால் எங்களின் எதிர்காலம் குறித்துப் பேசிப் பேசியே த.வெ.க.,வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, அ.தி.மு.க.,வின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்து தருகிறார் என்றார்.
