ADDED : நவ 24, 2024 04:02 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான சர்வே பணிகள் நேற்று துவங்கியது.
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 84, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100 வார்டுகள், மற்ற வார்டுகளில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க ரூ. 292.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது.
திருப்பரங்குன்றம் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான சர்வே பணி பாலசுப்பிரமணியம் நகரில் நேற்று துவங்கியது. அனைத்து பகுதிகளிலும் சர்வே பணி முடிவடைந்த பின்பு பணிகள் துவங்கும் என மண்டல தலைவர் சுவிதா தெரிவித்தார்.
