ADDED : டிச 19, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டி ஊராட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு மாதத்தில் 2 வாரங்களுக்கு வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டது.
சில மாதங்களாக சுழற்சி முறையில் மாதம் ஒரு வாரம் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. எனவே பழைய முறைப்படி பணி வழங்க வலியுறுத்தி, நேற்றுமதியம் 12:30 மணிக்கு கீரிபட்டி, போலியம்பட்டி கிராம பெண்கள் உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பி.டி.ஓ., அன்பரசன் தலைமையில் அலுவலர்கள், போலீசார் போராட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் பழைய முறைப்படி பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

