நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் பா.ஜ., வடக்கு மண்டல் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். தேனி பார்லிமென்ட் சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் ராஜா, அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி முன்னிலையில் மாற்று கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர். மண்டல் தலைவர் சேதுராமன் வரவேற்றார்.
பொதுச் செயலாளர்கள் தர்மராஜன், ஜெயபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கார்த்திகேயன், விஜயகுமார், அரசு தொடர்பு துறை தலைவர் ஜான்சன், துணைத்தலைவர் முத்துப்பாண்டி, பிரபாகரன், சவுந்தரபாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

