/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறக்கப்படாத வேளாண் துணை விரிவாக்க மையம்
/
திறக்கப்படாத வேளாண் துணை விரிவாக்க மையம்
ADDED : அக் 23, 2024 04:13 AM
மதுரை : வேளாண் துறையில் வாடிப்பட்டிக்குட்பட்ட நாச்சிகுளத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வேளாண் துணை விரிவாக்க மையம் தற்போது வரை திறக்கப்படவில்லை.
வாடிப்பட்டியில் ஏற்கனவே வேளாண் விரிவாக்க மையம் செயல்படுகிறது. இங்கிருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள நாச்சிகுளம் அதைச்சுற்றியுள்ள கிராம விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் துணை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. வேளாண் விதைகள், உரம், இடுபொருட்கள் இங்கிருந்து விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதற்காக கட்டப்பட்டும் பயனின்றி உள்ளது.
இம்மையம் திறக்கப்பட்டால் உதவி வேளாண் அலுவலர், டெப்போ மேலாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படும். எனவே மையத்தை திறக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.