ADDED : மார் 06, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் ஒன்றியம் ஊர்சேரி ஊராட்சி முத்தாலம்மன் கோயில் தெரு அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாத வாடகை ஓட்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.
மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் முத்தாலம்மன் கோயில் ரேஷன் கடை அருகே மையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.11.97 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் 5 மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது.
இன்று வரை திறக்கப்படாததால் இட நெருக்கடியான ஓட்டு வீட்டில் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
ஊராட்சி தலைவர் செந்தில்குமார்: இரு வாரங்களுக்கு முன் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மையத்தை திறக்க உள்ளோம் என்றார்.

