ADDED : ஆக 17, 2025 03:56 AM
மதுரை: நாம் தமிழர் கட்சி சார்பில் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே முதன்முறையாக அறிவிக்கப்பட்டனர். மதுரையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் தலைமை வகித்தார்.
அவர் பேசியதாவது: ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கட்சியின் கிளைகளை கட்டமைக்க வேண்டும். நாம் கட்டமைக்கப்பட்ட அரசியல் ராணுவம். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு செலுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர்.
நாம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றார். மதுரை வடக்குத் தொகுதி-திருநாவுக்கரசு, மதுரை தெற்கு- உதவி பேராசிரியர் அப்துல் ஹக்கீம், மதுரை மேற்கு- வழக்கறிஞர் விக்னேஷ்குமார், மதுரை கிழக்கு-வழக்கறிஞர் செல்வம், மதுரை மத்தி- வழக்கறிஞர் துர்கா, மேலுார்-கோட்டை குமார், திருப்பரங்குன்றம்- பேராசிரியை சத்யாதேவி, சோழவந்தான்-நாகலட்சுமி வேட்பாளர்களாக அறிமுகப்ப டுத்தப்பட்ட னர்.