தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாடிப்பட்டி பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்

 வாடிப்பட்டி பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்

 வாடிப்பட்டி பள்ளியில் பாதுகாப்பற்ற சூழல்


ADDED : ஜூலை 04, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படிக்கின்றனர். இப் பள்ளி வளாகத்தில் 2005 மற்றும் 1990களில் கட்டிய 2 வகுப்பறை கட்டடங்கள் 5ம், அங்கன்வாடி மையமும் உள்ளது.

ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் கட்டடங்கள் பராமரிக்கப்படுவதில்லை.

இதனால் கட்டடம் சேதமடைந்து, விரிசல் விட்டு உள்ளது. வகுப்பறை வராண்டா சிலாப்பில் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. கம்பிகள், பூச்சுகள் பெயர்ந்து அச்சுறுத்துகிறது. விரிசல் விட்டுள்ள கழிப்பறை கட்டடங்களில் விஷப் பூச்சிகள் அடைகின்றன. ஆபத்தான சூழ்நிலையில் மாணவர்கள் படிக்கின்றனர்.

வாக்குச்சாவடியாகவும் உள்ளதால் தேர்தலுக்கு முன் ஆய்வு செய்த அலுவலர்கள் இக்கட்டடங்களை பராமரிக்க கூறியும் நடவடிக்கை இல்லை. விபத்து விபரீதங்கள் ஏற்படும் முன் கட்டடங்களை சீரமைத்தால் கட்டட வாழ்நாள் கூடும். ஒன்றிய திட்ட கூட்டங்கள் நடத்த பயன்படும்.

எனவே ஒன்றிய நிர்வாகம் கட்டடங்களை பராமரிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us