ADDED : மார் 23, 2026 07:05 AM

வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி கட்டப்புளி நகர் கருப்புசாமி கோயில் அருகே 2 ஆண்டுக்கு முன் ரூ.3.50 லட்சத்தில் கட்டிய சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்துள்ளது.
பா.ஜ., நிர்வாகி ஜெயபாண்டி கூறியதாவது: மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் இப்பகுதி உள்ளது. இங்கு ஊராட்சி சார்பில் கழிப்பறை கட்டினர். இதனருகே ஏற்கனவே கட்டிய குளியல் தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
இப்பகுதியினர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பாதயாத்திரை பக்தர்கள், இவ்வழியே செல்லும் லாரி, வேன், டூரிஸ்ட் பஸ் டிரைவர்கள் பயன்படுத்துகின்றனர். கழிப்பறை கட்டியும் பயன்பாடின்றி உள்ளதால் பாதுகாப்பற்ற சூழலில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
இதனால் சுகாதாரம் பாதிக்கிறது. மக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே கழிப்பறை கதவுகள் சேதமடைந்துள்ளன. மத்திய அரசு நிதி வீணாகிறது. சீரமைக்க ஊராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
