தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய  திட்டம் அமல்படுத்த வலியுறுத்தல்

 மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய  திட்டம் அமல்படுத்த வலியுறுத்தல்

 மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய  திட்டம் அமல்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஜன 25, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்தும் 'யுனிவர்சல் பென்ஷன் திட்டம்,' நாடு முழுவதும் அமல்படுத்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க கருத்தரங்கு மதுரையில் நடந்தது. அகில இந்திய துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார்.

60 வயது கடந்த முதியவர்கள் அனைவருக்கும், பாகுபாடின்றி, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய 'யுனிவர்சல் பென்ஷன் திட்டம்,' நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

இந்திய இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு மாற்றியதை கண்டித்து பிப்.12 ல் அகில இந்திய அளவில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப்படுகிறது.

எல்.ஐ.சி.,அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 2010க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர் சுவாமிநாதன் பேசினார். பொதுச் செயலாளர் குன்னிகிருஷ்ணன், துணைத்தலைவர் குருமூர்த்தி, சி.ஐ.டி.யு.,மாநிலச் செயலாளர் லெனின், அரசு ஓய்வூதியர் சங்க செயலாளர் கிருஷ்ணன், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வின் சத்தியராஜ் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us