/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேம்பால விளக்குகளை சரிசெய்ய வலியுறுத்தல்
/
மேம்பால விளக்குகளை சரிசெய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 03:06 AM
மதுரை : மதுரை கப்பலுார் தொழிலற்பேட்டையில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முத்துக்குமார், பாண்டியராஜன், முத்துக்கிருஷ்ணன், முனியசாமி, கிளை நிர்வாகிகள் மலைச்சாமி, அண்ணாத்துரை உட்பட பலர் பேசினர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுரை நகரில் சாலை கட்டமைப்பை சீர்படுத்த வேண்டும். பழங்காநத்தம் ரயில்வே மேம்பாலத்தில் எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும். துாய்மைப் பணியாளர் பிரச்னைக்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிர்வாகி பெருமாள் நன்றி கூறினார்.