தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் தீவிர பிரசாரம்

 உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் தீவிர பிரசாரம்

 உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் தீவிர பிரசாரம்


ADDED : ஏப் 19, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 05:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றியத்தில் காங்., வேட்பாளர் சரவணகுமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இத்தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் சரவணகுமார் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று அவர் உசிலம்பட்டி தி.மு.க., வடக்கு ஒன்றிய பகுதியில் போலியாம்பட்டி, கீரிபட்டி, பெரியபாலார்பட்டி, சின்னபாலார்பட்டி, முப்பிடார்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முப்பத்தேழு ஆண்டுகளுக்குப்பின் உசிலம்பட்டியில் காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 'ஐம்பத்தெட்டு கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை, கால்வாய் மதகை 61 அடிக்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் உள்ள பயன்கள், தி.மு.க.,வின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஓட்டு சேகரிப்பின்போது வேட்பாளருக்கு திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் துாவி உற்சாக வரவேற்பு அளித்தனர். உசிலம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன், பழனி, சுதாகரன். கீரிபட்டி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ஜெகன், காங்., மகேந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் கலையரசன், அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us