ADDED : செப் 23, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி ; தேத்தாம்பட்டி இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டது. காளையை அடக்கிய காளையர்களுக்கும், வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொட்டாம்பட்டி, வஞ்சிநகரம், சிங்கம்புணரி உட்பட பல பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர் காளையை அடக்கியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.