/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடிப்பெருக்கு விழாவில் வைகையில் ஆராதனை
/
ஆடிப்பெருக்கு விழாவில் வைகையில் ஆராதனை
ADDED : ஆக 04, 2025 04:59 AM
மதுரை: மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் ஆழ்வார்புரம் பகுதியில் தீபாராதனை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
இயக்க தலைவர் ராஜன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள், வி.கே.சி.டிரஸ்ட் மஞ்சு கணேஷ் முன்னிலை வகித்தனர்.
காலை முதல் காயத்ரி பரிவார் ஹோமம், பாரம்பரிய விளையாட்டுகள், நாட்டியம், வைகை தீபாராதனை நடத்தப்பட்டது. திரளான துறவிகள், சாதுக்கள் வழிபாடு நடத்தினர்.
தலைவர் ராஜன் கூறுகையில், ''ஆறு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கில் வைகைத் திருவிழாவை கொண்டாடுகிறோம். நம் மரபு கைவிடப்பட்டதால் வைகைநதி நம் கண் முன்னே மாசுபடுகிறது. வைகை புதுப்பொலிவு பெறவேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த இவ்விழா நடக்கிறது'' என்றார். அமைப்பாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
மகா வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், தாம்ப்ராஸ் மாநில நிர்வாகி அமுதன், கல்வியாளர்கள் ராதா, ஆழ்வார்ராஜா, எம்மால் இயக்க நிறுவனர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

