ADDED : நவ 24, 2024 04:28 AM
மதுரை : மதுரை காஞ்சி மடத்தில் வைக்கம் மகாதேவ அஷ்டமி விழா நேற்று நடந்தது. காலை 10:30 மணிக்கு சந்த்ர மவுலீஸ்வரருக்கு அபிேஷகம், அர்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஐயர்பங்களா இ.பி.காலனியில் பக்தர்கள் குழு சார்பில் மகாதேவ அஷ்டமியை முன்னிட்டு நாராயண வாத்தியார் தலைமையில் பூஜைகள் நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் பூஜைகளை அர்ச்சகர் கோபி, நடராஜன் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமான், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தில் மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் சார்பில் வேத சிவாகம பாடசாலை மாணவர்களால் சிறப்பு பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. வேத பாடசாலை மாணவர்கள் சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர்.