ADDED : ஜன 20, 2025 05:27 AM
மதுரை: மதுரை நகரத்தார் சங்கம் சார்பில் யாவரும் வெளியீட்டின் ' வையாசி 19 ' புத்தக அறிமுக விழா நடந்தது.
சங்கத்தலைவர் வயிரவன் தலைமைவகித்தார். அவர் பேசுகையில்: புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகத்தின் கருத்துகளை பரிமாறும்போது இன்னும் சிறப்பு பெறும் என்றார்.
புத்தகத்தை சங்கர சீதாராமன் அறிமுகம் செய்தார். தமிழக அரசின் 2019க்கான சிறந்த நாவல் விருது பெற்றுள்ளது. நாவலின் மையக் கருத்துகளாக ஜாதிமத நல்லிணக்கம், கூட்டுக் குடும்ப முக்கியத்துவம், 3 தலைமுறை கருத்துகளை பெண்களின் வாழ்வியலின் முன்னேற்றங்கள்குறித்து கூறியுள்ளார்.
எழுத்தாளர் இன்பா, துணைத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் லட்சுமணன்,இணைச் செயலாளர் வள்ளியப்பன், முன்னாள் செயலாளர் மாணிக்கம், விஜயா பதிப்பக வேலாயுதம், யாவரும் பப்ளிகேஷன்ஸ் ஜீவகரிகாலன்,முன்னாள் தலைவர் சீனிவாசன், நகரத்தார் திருமகள் ஆசிரியர் ரோஜா பங்கேற்றனர்.