நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள சிலைக்கு தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் வேட்டையார், நிர்வாகிகள் அரவிந்தன், சங்கரய்யா, ரவிச்சந்திரன், விளையாட்டு குழுத் தலைவர் பாஸ்கர்பாண்டி கலந்து கொண்டனர்.
அகில பாரத அனுமன் சேனா சார்பில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

