ADDED : நவ 10, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா ஒத்தக்கடையில் நடந்தது.
தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். பவுண்டேஷன் ஆலோசகர்கள் ராகேஷ், பாண்டி முன்னிலை வகித்தனர். உறுப்பினர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் இயற்கையைக் காப்போம்' என உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுப்பினர்கள் பாலமுருகன், பரமேஸ்வரன், கல்யாணி, விக்னேஸ்வரி பங்கேற்றனர். உறுப்பினர் சந்திரா நன்றி கூறினார்.

