/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேகமெடுக்குது!! ஜரூராக நடக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்
/
வேகமெடுக்குது!! ஜரூராக நடக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்
வேகமெடுக்குது!! ஜரூராக நடக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்
வேகமெடுக்குது!! ஜரூராக நடக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்
UPDATED : நவ 13, 2025 06:56 AM
ADDED : நவ 13, 2025 06:48 AM

மதுரையில் கடல் இல்லாத குறையை போக்க வண்டியூர் கண்மாய் 500 ஏக்கரில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இங்குள்ள பூங்காவை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
கண்மாயின் மேற்கு, வடக்குப்பகுதிகளில் 3 கி.மீ., சைக்கிள் பாதை, 3 கி.மீ., நடைப் பயிற்சி பாதை, யோகா மையம், நுாலகம், செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி 'ஆம்பி' தியேட்டர், உணவகம், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், பேட்மின்டன் மைதானம் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மதுரையில் முதல்முறையாக காற்று நிரப்பிய பைபர் குடுவைகளால் ஆன 'பிளோட்டிங் செட்டி'என்னும் மிதவை நடைபாதை படகு குழாம் 500 சதுர மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது. நீரில் மிதக்கும் இந்த நீலநிற நடைபாதையை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள், பணிகள் முடியாததால் அனுமதியில்லை என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இப்பணிகள் 18 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி தெரிவித்து, 30 மாதங்களாகியும் முழுமை அடையவில்லை.
பணிகளை இழுக்க்க்....கிறாங்க
சமூக ஆர்வலர் கண்ணன் கூறியதாவது: மதுரை மக்களின் பொழுது போக்கும் இடங்களில் பிரதானமானது வண்டியூர் கண்மாய் பூங்கா.
இதன் பணிகள் 2025 ஜூலைக்குள் முடியும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் நிறைவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. பூங்கா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
இருபது சதவீதம் பாக்கி
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறில்லாத வகையில் பணிகள் நடக்கின்றன.
தற்போது 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 'பிளோட்டிங் செட்டி' நடைபாதை நீரின் அலையோட்டத்திற்கு ஏற்ப ஈர்ப்பு சக்தியுடன் செயல்படும்; சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையிலும்அமைக்கப்பட்டுள்ளது. இதன்மீது பாதுகாப்புடன் நடந்து செல்ல கைப்பிடிகள் பொருத்தும் பணி விரைவில் துவங்கும். பூங்காவில் செடி நடுதல், மின் விளக்கு அமைத்தல், ஸ்கேட்டிங் தளம் உட்பட எஞ்சிய பணிகள் நடக்கின்றன.
பூங்காவில் 400 பேர் கண்டுகளிக்கும் திறந்தவெளி தியேட்டரில்கருத்தரங்க நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். கண்காணிப்பு கேமராக்களை கையாளதனி அறை, படகு பயணம் செல்வோருக்கு லைப் ஜாக்கெட்கள்,முதலுதவி பெட்டி வைக்க பிரத்யேக அறை, குழந்தைகள்செஸ், கேரம் விளையாட உள்விளையாட்டு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2026 ஜனவரியில் பூங்கா
பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

