ADDED : அக் 09, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருமங்கலம் டோல்கேட் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
பதினைந்து நிமிடங்கள் நடந்த மறியலால் டோல்கேட்டின் இரு புறமும் 200 மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.