ADDED : ஜன 13, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் உள்ள மலையாளம் கிருஷ்ணய்யர் வேத சாஸ்திர பாடசாலையில் டிரஸ்டி ஹரிஷ் சீனிவாசன் தலைமையில் வேத பாராயணம் மற்றும் பிராமண சந்தர்ப்பனை நடந்தது. உலக நன்மைக்காக அத்யாபகர் வரதராஜ் பண்டிட் தலைமையில் வேத விற்பன்னர்கள், பாடசாலை வித்யார்த்திகள் பாராயணம் படித்தனர்.
கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், அர்ச்சனைகள், பாராயணங்கள், ஆரோக்ய லட்சுமி, தன்வந்திரி ஹோமம் நடந்தது. தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்ரமணியம் செய்தார்.