ADDED : மார் 20, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 8ல் பக்தர்கள் காப்பு கட்டி 12 நாட்கள் விரதமிருந்தனர். நான்கு நாள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நேற்று (மார்ச் 19) துவங்கியது.
அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன் மற்றும் மந்தை கருப்பண்ண சுவாமி சிலைகள் தும்பைபட்டி பெரிய மந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
மார்ச் 21 பெரிய மந்தையில் உள்ள சுவாமி சிலைகள் வீரகாளியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் 22ல் நேர்த்திகடன் வேண்டி கிடைக்க பெற்றவர்கள்
து .அம்பலகாரன்பட்டியில் இருந்து சுவாமி சிலைகள் மற்றும் பதுமைகளை கோயிலுக்கு கொண்டு செல்வர். அங்கு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், அங்கப்பிரதட்சனை செய்தும், கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.

