தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாகனங்கள் சிறைபிடிப்பு

 வாகனங்கள் சிறைபிடிப்பு

 வாகனங்கள் சிறைபிடிப்பு


ADDED : பிப் 05, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் சிவரக்கோட்டை கண்மாயில் அனுமதி அளவை மீறி கிராவல் மண் அள்ளியதால் மண்அள்ளிய லாரி, இயந்திரங்களை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.

கண்மாய்களில் அரசு அனுமதி அளவைவிட பல மடங்கு ஆழத்திற்கு இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி விற்பனை செய்வதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். குடிநீர் ஆதாரம் கேள்வி குறியாகும் என்பதால் மக்கள் ஆவேசத்துடன் கண்மாய்க்கு சென்றனர்.

கண்மாயில் மண் அள்ளுவதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

அவர்களிடம் பேசிய அதிகாரிகள், ''உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறியதை தொடர்ந்து லாரிகளில் அள்ளிய கிராவல் மண் மீண்டும் கண்மாயில் கொட்டப்பட்டது. அதன்பின் லாரிகள், ஜே.சி.பி., இயந்திரங்களை மக்கள் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us